பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

பாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் சுஜீத் இயக்கி உள்ளார். அறிவியல் புனைக்கதை அமைப்பில் இப்படம் தயாராகி வருவதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் இதனுடைய உருவாக்கம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டு வந்தன. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள சாஹோ படத்தின் டீசர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கிட்டத்தட்ட ரூ.300 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஹைதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ரோமேனியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த நிலையில், வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. 
Saaho Movie: ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் ’சாஹோ’- அசரவைக்கும் மேக்கிங் வீட…
அதற்கு முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில், பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ரொமான்ஸ் செய்வது போன்றும், துக்கமோ, சந்தோஷமோ, பகிர்ந்து கொள்ள யாருமில்லை என்று ஷ்ரத்தா கூறுவது போன்றும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் பொழுது ஹாலிவுட் படங்கள் தோற்றுப்போகும் அளவிற்கு சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், நேற்று அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளன. டிரைலர் தொடர்ந்து சாதனை படைத்து வரும் நிலையில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ படத்தின் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் பட்ஜெட்டை விட, இப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. 

டிரைலர் டீசர் மட்டுமல்லாமல், படமும், போட்டியாகவே வெளியாகிறது. ஆம், நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் நிலையில், சாஹோ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.