இது நம்ம ஆளு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அடா ஷர்மா. பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார்.

அடா சர்மா தற்போது திருநங்கை வேடத்தில்  அதாவது ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கதாபாத்திரத்தில் ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.

Man to Man என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும்  கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்தப்படத்தை அபிர் எழுதி இயக்கவுள்ளார். 

இந்தப் படம் திருமணம் செய்த பின் ஹீரோவிற்கு அடா ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்ற உண்மை தெரிந்தபின் தொடர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா… அல்லது அதன் பின் வரும் பிரச்னைகளைக் குறித்து நகைச்சுவையுடன் சொல்கிறது.