கார்டிப்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் ஏழாவது போட்டியில் இலங்கைஅணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது. 
மாற்றம் இல்லை: 
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் ஏழாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் நையிப் முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். 

ஆப்கானிஸ்தான் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் ஜீவன் மெண்டிசுக்கு பதிலாக பிரதீப் அணியில் சேர்க்கப்பட்டார். 

சுத்தியடித்த நபி: 
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 33 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்த போது, மழை குறுக்கிட்டதால், போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

samayam tamil

Srilanka41 ஓவர்களாக குறைப்பு: 
மழை நின்ற பின் போட்டி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலங்கை அணி 36.5 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

நசுங்கிய ஆப்கான்:

எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஆப்கான் அணி, 32.4 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இலங்கை அணிக்கு நுவன் பிரதீப் 4 விக்கெட் சாய்த்தார்.