இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல்டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.
கோலி பேச்சு…….
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வெற்றி தான் முக்கியம் தனது பார்ம் முக்கியமல்ல, என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், இந்திய அணியின் வெற்றிக்கு கோலி ரன்கள் அடித்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆண்டர்சன் கூறுகையில்,‘அவர் ரன்கள் எடுக்கிறாரா இல்லை என்பது, இங்கிலாந்துக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் அவர் பொய் சொல்லிக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் இந்தியா வெல்ல கோலி ரன்கள் எடுப்பது அவசியம். ஒரு கேப்டனாகவும் உலகின் சிறந்த வீரராகவும் சாதிக்க வேண்டியது அவரின் கடமை. அதை விட்டுவிட்டு, அணி வென்றால் தனது பேட்டிங் முக்கியமல்ல என