ரஷ்யாவில் சுமார் 49 அடி அகலமுள்ள திடீர் பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இந்தப் பள்ளம் ஒரு பெரிய கட்டடம் அளவுக்கு ஆழத்தைக் கொண்டுள்ளதாக தெரிகிறது. 

ரஷ்யாவின் துலா நகரத்துக்கு அருகே இருக்கும் டெடிலோவா என்னும் கிராமத்தில்தான் இந்த மெகா பள்ளம் உருவாகியுள்ளது. 

இந்தப் பள்ளம் 49 அடி அகலமும், 98 அடி ஆழமும் கொண்டுள்ளது. காய்கறித் தோட்டம் இருந்த இடத்தில் இந்தப் பள்ளம் உருவாகியுள்ளது. 

இதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த திடீர் பள்ளம் உருவானதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மட்டும் தற்போதைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.