லண்டன்: இங்கிலாந்தில் உலககோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கும் நிலையில் இதில் பங்கேற்கும் 10 அணியின் கேப்டன்களும் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்தித்தனர். பிரின்ஸ் ஹாரியும் எல்லா கேப்டன்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

ராணியுடன் சந்திப்பு: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணி கேப்டன்களும் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த ராயல் கார்டன் விருந்தில் கலந்து கொண்டனர்.

69572017கோலியை சந்தித்த பிரின்ஸ் ஹாரி:
பிரிட்டன் இளவரசர் ஹாரி, இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மார்கனை வாழ்த்திய ராணி:
இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு ராணி எலிசபெத் வாழ்த்து தெரிவித்தார்.

பின்ச்சை சந்தித்த ராணி:
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சிற்க்கு வாழ்த்து தெரிவித்த ராணி எலிசபெத்.

samayam tamil

5

டுபிளசியுடன் ஆலோசித்த பிரின்ஸ்:
தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசியுடன் ஜாலியாக பேசிய இளவரசர் ஹாரி.

ஹோடரை சந்தித்த ராணி:
விண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டரை வரவேற்ற இங்கிலாந்து ராணி எலிசபெத்.

பின்சுக்கு வாழ்த்து:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஆரோன் பின்சுக்கு வாழ்த்து தெரிவித்த பிரின்ஸ் ஹாரி.

samayam tamil

8

ஹோலடருக்கு வாழ்த்து:
விண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து இளவரசர் ஹாரி.