தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக உச்சம் தொட்டவர் வடிவேலு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அவரது நகைச்சுவைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் பொருத்திப் பார்க்கக் கூடிய நபராக வடிவேலுஇருக்கிறார்.
இதற்காகவே Vadivelu4Life என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பயன்படுத்தப் பார்த்திருப்போம். 23ஆம் புலிகேசியின் அடுத்த பாகமான, 

24ஆம் புலிகேசி படத்தை எடுக்கத் தொடங்கினர்.
ஆனால் சில நாட்களில் இயக்குநர் சிம்புதேவனிற்கும், வடிவேலுவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நடந்த சம்பவம் குறித்து சங்கத்தில் விளக்கமளித்த வடிவேலு, நான் எந்தப் பிரச்னையும் செய்யவில்லை. படப்பிடிப்பை தாமதமாக நடத்தியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொருளாதார இழப்பும் ஏற்பட்டது.

இதனால் இனி நான் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் படத்தை வடிவேலு முடித்துக் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் படத்திற்கான செலவு ரூ.9 கோடியை படக்குழுவிற்கு கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இதனை வடிவேலு ஏற்காததால், அவருக்கு ரெட் கார்டு வழங்கி நடிக்க முடியாமல் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் Pray For Nesamani என்ற ஹேஸ்டேக் திடீரென வைரலானது. இது வடிவேலுவை பற்றி மீண்டும் பேச வைத்தது.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு வடிவேலு பேட்டியளித்தார். அதில், தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுத்தால் என்ன? அதான் உலகளாவிய சினிமா தளமான நெட்பிளிக்ஸ் இருக்கிறதே.

இனிமேல் அதில் நான் நடிக்கப் போகிறேன் என்று வடிவேலு தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.