ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரமுடன் அக்‌ஷரா ஹாசன் நடித்ததுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் இம் மாதம் 28ஆம் திகதி அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் அனைவரையும் ஈர்த்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் ஒரு பாடலை விக்ரம் பாடியுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.