தளபதி விஜய் தனது தங்கையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். மாஸ் படங்கள் மற்றும் நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது தெறி மற்றும் மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 

தளபதி 63 படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் இரண்டு சிங்கிள் டிராக் ஆகியவை வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், விஜய் தனது சகோதரி வித்யா மற்றும் தாய் ஷோபா ஆகியோருடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சென்னையில் பிறந்த விஜய்யின் இயற்பெயர் ஜோசப் விஜய். இவரது தந்தை சந்திரசேகர். இவர் ஒரு திரைப்பட இயக்குனர். தாயார் ஷோபா. இவர் ஒரு பின்னணி பாடகி மற்றும் கர்நாடக பாடகியும் கூட. 

samayam tamil

11
விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு சகோதரி இருந்தார். அவர், 2 வயதில் இறந்துவிட்டார். அவரது மரணம் விஜய்யை வெகுவாக பாதித்தது. சிறு வயதில், திறமையாக பேசி, குறும்புத்தனம் செய்த விஜய், வித்யாவின் மரணத்திற்கு பிறகு அமைதியாகிவிட்டார் என்று ஷோபா குறிப்பிட்டுள்ளார். வித்யாவின் கதை 2005ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

samayam tamil

12

samayam tamil

13

samayam tamil

14

samayam tamil

16

samayam tamil

17

samayam tamil

Vjay