மாட்ரில் வரும் 24ஆம் தேதி சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி, மி ஏ2 மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சியோமியின் அடுத்த வரவு குறித்து பாலிஷ் வர்த்தக இணையதளமான X-Komல் தகவல் வெளிவந்துள்ளது. புதிய வரவு சியோமி ஏ2 லைட் என்று கூறப்படுகிறது. இது சந்தையில் பிரபலமாக விளங்கும் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்நாப்டிராகன் 625, ஆண்ட்ராய்டு ஒன், 4000 mAh பேட்டரி
சியோமியின் புதிய ஸ்மார்ட்போனில் 2GHz ஆக்டோ கோர் கார்டெக்ஸ் A53 குவால்கம் ஸ்நாப்டிராகன் 625 பிராசசர், அட்ரினோ 506 GPU, 4GB ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறுகிறது. இது ஆண்ட்ராய்டு ஒன் ஓ.எஸ் மூலம் செயல்படுகிறது. இதன் டிஸ்பிளே 5.84 இஞ்ச் IPS எல்.சி.டி ஒன், 2280×1080 பிக்சல்கள் ரிசல்யூசன் கொண்டுள்ளது. இந்தப் போன் 4000mAh பேட்டரி பெற்றுள்ளது.
இதில் 12 எம்பி + 5 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, முன்பக்க f/2.0 லென்ஸ் மற்றும் பின்பக்க f/2.2 லென்ஸ் கொண்டது.
இரண்டு சிம் போடும் வகையில், கருப்பு வண்ணத்தில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். இதில் USB-Cக்கு பதிலான மைக்ரோUSB இடம்பெறுகிறது. இதன் விலை ரூ.18,400 என்று கூறப்படுகிறது. இது 64ஜிபி உள்ளடக்க மெமரி மாடலுக்கு பொருந்தும்