இந்திய விக்கெட் கீப்பர் தோனி, கிளவுசில் இடம் பெற்றிருந்த இந்திய ராணுவத்தின் முத்திரையை நீக்க ஐசிசி., உத்தரவிட்டுள்ளது. 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. வரும் ஜூலை 14, 2019 வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கிறது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது. 
அசத்தல் வெற்றி:
இதில் இந்திய அணி சவுத்தாம்டனில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதில் பங்கேற்ற முன்னாள் இந்திய கேப்டன் தோனி, இரண்டு உலகசாதனைகள் படைத்தார். 

ராணுவ முத்திரை: 
இதைத்தாண்டி, தோனியின் கிளவுஸில் இந்திய பாரா ஸ்பெஷல் போர்ஸின் முத்திரையான ‘பாலிதான்’ (தியாகம்) இடம் பெற்றிருந்தது. இதை கவனித்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் தேசப்பற்றை பாராட்டி வருகின்றனர். 

samayam tamil

MS Dhoni Gloves‘லெப்டினெண்ட்’ தோனி: 
கடந்த 2011ல் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினெண்ட்டாக தோனி நியமிக்கப்பட்டார். விளையாட்டு வீரராக மட்டும் இல்லாமல் நாட்டின் மீது தோனி கொண்டுள்ள பற்று காரணமாக தான் தோனியை ரசிகர்கள் கடவுளாக பார்க்கின்றனர். 

View image on Twitter
View image on Twitter

Mujaid Alam Bakarwal@alam_mujaid

👇
🙏
🇮🇳

Salute & respect to MS Dhoni who printed insignia of ‘Balidan’ on his wicket keeping gloves.

That’s the regimental dagger insignia which represents the Para SF, Special Operations unit of Indian Army attached to Parachute Regiment.#INDvSA #Dhoni @majorgauravarya1,40711:43 PM – Jun 5, 2019291 people are talking about thisTwitter Ads info and privacyநீக்க உத்தரவு: 
இந்நிலையில் இது விதிமீறல் என்பதால், தோனி கிளவுசில் உள்ள ராணுவ முத்திரையை நீக்க உத்தரவிட வேண்டும் என ஐசிசி.,, இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பிசிசிஐ.,) உத்தரவிட்டுள்ளது. 

View image on Twitter
View image on Twitter

Sachin Joraviya@SachinJoraviya

This man shows his love for the nation and army.
A Regimental Dragger(BALIDAN) of Indian Army Para Special Force on MS Dhoni Gloves. #IndianArmy #Balidan14910:44 PM – Jun 5, 201939 people are talking about thisTwitter Ads info and privacyகிரிக்கெட் வ ல்லரசு: 
ஆனால் கிரிக்கெட் வல்லரசாக பிசிசிஐ., தோனியின் கிளவுசில் உள்ள முத்திரையை நீக்க சொல்லுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், ஐசிசி., தோனியின் தேசப்பற்றை அவமானப்படுத்தியுள்ளதாக கொந்தளித்து வருகின்றனர்.