தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கும் அதன்பின்னர் இந்த படத்தின் புரமோஷனும் படிப்படியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையின் வியாபாரம் முடிந்தது என்ற செய்தியை பார்த்தோம். தற்போது இந்த படத்தின் தமிழக உரிமையை வளர்ந்து வரும் பிரபல விநியோகிஸ்த நிறுவனமான ஸ்க்ரீன் சீன் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ஏற்கனவே இந்த நிறுவனம் இந்த ஆண்டில் ‘தடம்’, நட்பே துணை’ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டுள்ளது என்பதும் இரண்டுமே வர்த்தக அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ்,  இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.