மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிட்டுள்ள 34 வயதுடைய நவனீத் கௌர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவரும், சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கியுள்ள யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக போட்டியிட்டார்.

நடிகர் கருணாஸுடன் நடித்த நடிகை ஒருவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியாகியுள்ளார்.

தமிழில் நடிகர் கருணாஸுக்கு ஜோடியாக அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்தவர் நடிகை நவனீத் கௌர் ராணா. இதுதவிர அரசாங்கம் என்ற தமிழ்ப் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிட்டுள்ள 34 வயதுடைய நவனீத் கௌர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவரும், சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கியுள்ள யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக போட்டியிட்டார்.

சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்பியாக இருந்த ஆனந்த் ராவ் அட்சுகௌவை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி ஆகியுள்ளார். யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சியை காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் ஆதரித்தன.

பஞ்சாபியான் நவனீத் கௌர் மும்பையில் படித்து வளர்ந்தவர். கடந்த 2014-ம் ஆண்டு 1.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற நவனீத் கௌர் இந்தமுறை வெற்றி பெற்றுள்ளார்.