தென் திரை உலகில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கொடி கட்டி பறந்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ படம் மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் ரசிகர்களை மிக அதிகளவில் கவர்ந்தது. 

சாய் பல்லவி தற்போது NGk படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். NGk படம் வரும் 31ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகின்றது. 

NGk படம் குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பார்த்த உடன் காதல் என்கிறார்களே அதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா என சாய்பல்லவியிடம் கேட்டனர். 

அதற்கு சாய் பல்லவி, “எனக்கு பார்த்த உடன் காதல் வராது அதில் நம்பிக்கையும் இல்லை. நான் பொதுவாக ஆண்களை விட, பெண்களைத் தான் ரசித்து சைட் அடிப்பேன். 

பெண்கள் அணியும் உடை, அலங்காரம், சிகை ஒப்பனை ஆகியவற்றை அதிகமாக கவனித்து பார்ப்பேன். பெண்கள் அணியும் வித விதமான ஆடையை கண்டு ரசிப்பேன்.” என தெரிவித்துள்ளார். 

அவர் பேசியது குறித்து சமூக வலைதலங்களில் அவரை ஓரினைச் சேர்க்கையாளரோ? என கேள்வி எழுப்பி விமர்சித்து வருவது வருந்தத்தக்கதாகும்.