நான் என்ன சொன்னாலும், இவன் கேட்கமாட்டேங்குறான் என்று விஜய் சேதுபதி இயக்குனர் அருண்குமாரை குறிப்பிட்டு கூறியுள்ளார். 

நடிகர் விஜய் சேதுதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சிந்துபாத். இயக்குநர் சு அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

நான் சொல்லுறதையெல்லாம் இயக்குனர் கேட்கவே மாட்டார்: விஜய் சேதுபதி!
சு. அருண்குமார் இயக்கிய மூன்று படங்களிலும் விஜய் சேதுபதிதான் கதாநாயகனாக நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினியும், சேதுபதியை தொடர்ந்து மூன்றாவது படமாக இப்படம் வருகிறது. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. படக்குழு அனைவருடனும் யுவன் சங்கர் ராஜாவும் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டனர். 

விழாவில் பேசிய விஜய் சேதுபதி இந்தப்படத்தின் கதை ரொம்ப சிம்பிள். மனைவியை ஒரு வில்லன் கடத்திபோய்விட ஹீரோ கடல் கடந்து போய் காப்பாற்றி வருகிறான். அது என்ன இடம் என்று சொன்னால் அதைப் பிரச்சனை ஆக்கி விடுவார்கள் என்றார். மேலும் இந்தப்படத்தின் இயக்குநர் அருண்குமார் மிகத்திறமையானவன். முதல் படம் முடிந்த உடனே என்னிடமே தொடர்ந்து படம் பண்ணாதே வெளியே போய் படம் பண்ணு எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். 

நான் சில ஹிரோக்களை பேசி அனுப்பி வைத்தேன். அதுவும் நடக்கவில்லை. மீண்டும் என்னிடமே வந்து விட்டான். இந்தப்படமும் கண்டிப்பாக ஹிட்டாகும். இப்போதும் அதையே தான் சொல்லியிருக்கிறேன். என்னை விட்டுப் போய் வெளியே படம் செய் என சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம் என கலகலப்பாக பேசினார்.