கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது சாத்தப்பாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள், காலையில் பள்ளிக்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த ஊரில் உள்ள பெரிய ஏரிக்குச் சென்றனர். அதில் மூவரும் ஆர்வமாக குளிக்கத் தொடங்கினர். இந்நிலையில் ஏரியில் புதை குழியில் மூவரும் சிக்கிக் கொண்டனர். எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியவில்லை.

இதனால் புதைகுழியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் மூன்று சிறுவர்களின் உடலையும் மீட்டனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.