சொகுசாக கார்கள் பல லட்சம் விலை இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இவ்வாறான சொகுசு கார்களை வாங்குவதை விட அதை பராமரிப்பது அதற்கு பெட்ரோல்போடுவது தான் பெரிய செலவு. 
கார்களை சில லட்சங்களில் வாங்கிவிடலாம். ஆனால் ஒவ்வொரு முறை காரை எடுக்கும்போதும் சில ஆயிரங்களில் பெட்ரோல் போட வேண்டியது வரும் அதுதான் பலருக்கு பெரும் பிரச்சனை.

சீனாவை சேர்ந்த விவசாயி ஒருவர் பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்ற தீவிரமான ஆர்வத்தில் இருந்தார். அவர் தனது வாழ்நாளில் சிறிது சிறிதாக சேமித்து ஒரு வழியாக தான் ஆசைபட்ட காரை வாங்கிவிட்டார். 

ஆனால் அதை அவரால் அனுபவிக்க முடியவில்லை. அந்த காரை எங்கு எடுத்து சென்றாலும் அதிகமாக பெட்ரோல் செலவாகிறது. அவ்வளவு பெட்ரோல் போட அவரிடம் காசு இல்லை. மேலும் காரையும் முறையாக பராமரிக்க வேண்டிய செலவும் இருக்கிறது. 

இந்நிலையில் தன் காருக்கு பெட்ரோல் போடுவதற்காக தினமும் இவர் பைக்கில் சென்று மற்றவர்களின் கோழி மற்றும் வாத்துகளை திருடி வந்து தன் வீட்டில் வைத்து வளர்த்து அதை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு காருக்கு பெட்ரோல் போட்டு சொகுசு பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த விவகாரம் சீன போலீசாருக்கு தெரியவந்தவுடன் போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்பொழுதும் அவர் தனது பிஎம்டபிள்யூ காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் சாலைகள் குறுகிய சாலையாக இருந்ததால் அவரால் போகமுடியவில்லை. இறுதியாக போலீசில் சிக்கி கொண்டார். 

தன் காருக்கு பெட்ரோல் போடுவதற்காக ஒருவர் கோழி மற்றும் வாத்துகளை திருடிய சம்பவம் சீனாவில் வைரலாக பரவி வருகிறது.