ஸ்பெயினைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் வேடிக்கையாக செய்த நிகழ்ச்சியின் விளைவாக 15 மாத சிறைதண்டனை பெற்றுள்ளார்.

வீடின்றி சாலையோரம் வசித்து வந்த முதியவர் ஒருவருக்கு கிரீம் பிஸ்கட்டில் கிரீமுக்கு பதில் பற்பசையை தடவி ரீசெட் என்ற யூடியூப் பிரபலம் அளித்துள்ளார்.

அதை உண்ட சாலையோரவாசிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாலையோரவாசி அந்நாட்டு நீதிமன்றத்தை நாடினார்.

நீதிமன்றத்தில் ரீசெட்டுக்கு 15 மாத சிறைதண்டனயும், பாதிக்கப்பட்டவருக்கு 22 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர்கள் நிவாரணத் தொகை அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த சம்பவம் உலகம் முழுக்க உள்ள ரீசெட்டின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சாலையோரம் வசித்தவருக்கு பிஸ்கட் கொடுத்து அதை வீடியோவாக்கி ரசித்துள்ளார் ரீசெட்.