கூகுள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது online அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

புதிய அம்சங்களில் பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களில் கூகுள் Account பயன்படுத்தும் போது ஒரே Click செய்து அவற்றை இயக்கும் வசதி, search மற்றும் Maps என பல்வேறு சேவைகளில் Privacy mode வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு அதிகளவு அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

இதன் மூலம் கூகுளின் அதிகளவிலான சேவைகளில் சிறப்பான Privacy setting மற்றும் Controls களை அறிமுகம் செய்ய, தொடர்ந்து பணியாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இதனை சரியாக செயற்படுத்தும் நோக்கில் சரியான வகையில் முதலீடு செய்து வருகின்றதுடன் தொடர்ந்து அதன் சேவைகளில் புதுமை மற்றும் பயனர்களின் online அனுபவத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மேம்பட்ட அம்சங்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க இருக்கும் வாடிக்கையாளர்கள் கூகுளின் இலவச மற்றும் கட்டண சேவைகளை பயன்படுத்துவோர் சமளவில் தனியுரிமையை பெற வேண்டும் என்பதற்காக கூகுள் இதனை சரியாக வழங்கவே முயற்சி செய்து வருகின்றது.