டீ ட்ரீ ஆயிலில் தலைமுடிக்கு உகந்த நற்குணங்கள் ஏராளமாக உள்ளது.  இதில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் தன்மை இருப்பதால் அரிப்பு, வறட்சி, பொடுகு தொல்லை ஆகியவற்றை போக்குகிறது.  எல்லாவிதமான கூந்தலுக்கு ஏற்றது.  வலுவிழந்த மயிர்கால்களை சரிசெய்து, இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றி ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்திருக்க உதவும்.  டீ ட்ரீ எண்ணெய் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்பட்டு, மென்மையான மற்றும் உறுதியான கூந்தலை பெற உதவுகிறது.  டீ டீரியின் நன்மைகள் அடங்கிய சில ஷாம்பூகளை பார்ப்போம். 

கலா நேச்சுரல்ஸ் டீ ட்ரீ ஆயில் ஷாம்பூ:

டீ ட்ரீ ஆயில் மற்றும் சில மூலிகைகளின் நன்மைகள் அடங்கிய இந்த கலா நேச்சுரல்ஸ் ஷாம்பூ ஸ்கால்பில் உள்ள பொடுகை நீக்கும் தன்மை கொண்டது.  சல்ஃபேட் மற்றும் பேரபின் சேர்க்கப்படவில்லை.  இதன் விலை ரூபாய் 499 மட்டுமே.

எஸ்டிபொடானிக் யூக்லிப்டஸ் அண்ட் டீ ட்ரீ ஆயில் ஷாம்பூ:

இதில் வைட்டமின் பி5, கற்றாலையின் நன்மைகள், டீ ட்ரீ, அவகாடோ, க்ரேப்சீட், யூக்லிப்டஸ், பெப்பர்மின்ட் மற்றும் லெமன்கிராஸ் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படும் எசென்ஷியல் எண்ணெய்கள் இருக்கிறது.  இதன் விலை ரூபாய் 499 மட்டுமே.

நேச்சுரல் வைப்ஸ் ஆயுர்வேதிக் டீ ட்ரீ ஷாம்பூ:

டீ ட்ரீ, நெல்லிக்காய், ப்ரிங்கராஜ் மற்றும் கற்றாலை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ஷாம்பூ பொடுகு, முடி உதிர்வு ஆகியவற்றை சரிசெய்து, கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். 

ட்ரூமென் ஆஸ்திரேலியன் டீ ட்ரீ ஆயில் ஆண்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ:

ஹிமாலயன் ஆர்கானிக்ஸ் டீ ட்ரீ ஷாம்பூ:

ஆர்கானிக் டீ ட்ரீயின் நன்மைகள் நிறைந்திருப்பதால் பொடுகு பிரச்சனையை நீக்கி, மயிர்கால்களுக்கு உறுதியை கொடுக்கிறது.  பேராபின் மற்றும் சல்ஃபேட் சேர்க்கப்படாத இந்த ஷாம்பூ கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது.  இதன் விலை ரூபாய் 499 மட்டுமே.

ஓரிஃப்ளேம் டீ ட்ரீ ஆயில் அண்ட் பர்டாக் ஷாம்பூ:

கூந்தலை க்ளென்ஸ் செய்து, கண்டிஷனராகவும் செயல்படுகிறது.  கூந்தலுக்கு புது பொலிவு கொடுத்து, பட்டு போன்ற மென்மையை கொடுக்கிறது.  இதன் விலை ரூபாய் 328 மட்டுமே.

ஓஜிஎக்ஷ் டீ ட்ரீ மிண்ட் ஷாம்பூ:

டீ ட்ரீ ஆயில், மில்க் ப்ரோட்டீன் மற்றும் பெப்பர் மிண்ட் எண்ணெயின் நற்குணங்கள் நிறைந்த இந்த ஷாம்பூ கூந்தலுக்கு ஈரப்பதம் மற்றும் உறுதியை கொடுக்கிறது.  கூந்தலை செழித்து வளர செய்கிறது.  இதன் விலைரூபாய் 625 மட்டுமே.

ஆலோ வேதா டீ ட்ரீ ஆயில் ஆண்டி டாண்ட்ரஃப் ஷாம்பூ:

மூலிகைகளின் நற்குணங்கள் நிறைந்த இந்த ஷாம்பூவில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கள் தன்மை இருக்கிறது.  வறண்ட மற்றும் பொடுகு நிறைந்திருக்கும் ஸ்கால்பை சுத்தம் செய்யும்.  இதன் விலைரூபாய் 260 மட்டுமே.