நடிகை வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் சவாலான கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்கிறார்.

அந்த நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் கன்னித்தீவு இந்த திரைப்படத்தை சுந்தர் பாலு எழுதி இயக்கியுள்ளார், மேலும் படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி, சுபிக்ஷா ஆகிய நடிகைகள் வரலட்சுமியுடன் இணைந்து நடித்துள்ளார்கள், இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது.

மேலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கன்னித்தீவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் நான்கு கதாநாயகிகளும் தண்ணீரில் இருக்கிறார்கள், அவர்களின் கால்களுக்கு அருகே ஒரு முதலையும் இருப்பது போன்று இந்த போஸ்டர் இடம் பெற்றிருக்கிறது.