மோடி இன்று மாலை பதவி ஏற்கவுள்ளார். அவரது பதவி ஏற்பை இருட்டடிப்பு செய்ய, மோடி எதிர்ப்பாளர்கள் சாதரணமாக வைரலாகிய நேசமணி ஹேஷ்டேக்கினை உலகம் முழுக்க டிரெண்ட் ஆக்கி இந்தியாவின் பார்வையை மோடி பக்கம் இருந்து திசை திருப்ப முயல்கின்றனர் என பாஜக ஆதரவாளர்கள் சிலர் டுவிட்டரில் கருத்து பதிவுட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் நடந்த பெண்கள் தற்கொலை செய்தி வைரலாவதைத் தடுக்க அக்கல்லூரி மாணவர்களால் இந்த ஹேஷ்டேக் திட்டமிட்டு பரப்பப் படுகிறது என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் சிலர், நாட்டில் விவாதிக்கப்படவேண்டிய ஹைட்ரோ கார்பன், காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது இதுபோன்ற தேவை இல்லாத விஷயங்களை பேசி நேரத்தை நெட்டிசன்கள் வீணடிக்கின்றனர். மேலும் இதற்கு சில ஊடகங்களும் துணை போகின்றன என குற்றஞ்சாட்டுகின்றனர்.

நேசமணி பதிவிற்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் பதிலளித்து டுவீட் செய்துள்ளார். எந்த அளவுக்கு பிரபலங்கள் இந்த டுவிட்டுக்கு பதில் அளிக்கின்றனரோ அந்த அளவுக்கு இந்த செய்தி பெரிதாகும். இவ்வாறு சிறு விஷயத்தை உலக அளவுக்கு கொண்டு சேர்க்கும் ஆற்றல் டுவிட்டர் வலைதளத்துக்கு உண்டு. இதில் நல்ல செய்திகளை மட்டும் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை என்பதை அனைவரும் உணரவேண்டும்.