முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர். 

தண்டு வடம் தசை, தசைதார், எலும்பு அதன்பிரிவு என பல அமைப்புகளை தன்னுள் கொண்டது. இதில் ஏதேனும் பாதிப்பு இருப்பதால் முதுகு வலி ஏற்படலாம். 
புகைப்பழக்கம் உள்ளிட்ட புகையிலைப் பழக்கத்தால் இதயம், உடலின் ரத்தக் குழாய்கள், நுரையீரல் உட்பட பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை மக்கள் உணர்ந்து புகை பிடிக்காமல் இருப்பதே நல்லது. 

மேலும் தாங்கள் புகை பிடிப்பதால் அருகில் இருக்கும் தமது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரும் பாதிக்கப்படுகிறார் என்பதை அனைவரும் உணர வேண்டும். 

புகைப்பழக்கம் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகாரித்து வருவதே இதற்கு சான்று.

இது தண்டுவடத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தண்டுவட டிஸ்குகள் பாதிப்படையலாம். எனவே தண்டுவட பாதிப்பை தடுக்க புகைப்பழக்கத்தை கைவிடுவது நல்லது.