பலருக்கு இருக்கும் பிரச்சனை அவர்களுக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது தான். ஏதோ ஒரு காரணத்திற்காக நாம் ஒருவர் மீது விருப்பமாகவும் காதலாகவும் இருந்திருக்கலாம். அதன் பின்னர் அவர்களின் நடவடிக்கைகள் அல்லது பேச்சுகள் என ஏதோ ஒன்று அவர்களை நம்மளிடம் இருந்து தள்ளி வைக்க சொல்லி நமக்கு நம் மனது சொல்லிக்கொண்டே இருக்கும். அவர்களை எப்படி உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்குவது என இங்கே காணலாம்.

பாசிட்டிவ் எண்ணங்கள்

நீங்கள் ஒதுக்க விரும்பும் நபர் உங்களை தொடர்பு கொள்ள அல்லது உங்களிடம் பேச முற்பட்டுக்கொண்டே இருக்கலாம் அவற்றிக்கு எல்லாம் சளைக்காமல் அவர்களை நீங்கள் நிராகரிகிறீர்கள் என்று அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் இருந்து அவர் அந்த பதிலை எதிர்பார்க்காவிட்டாலும் நீங்கள் அதை அவருக்கு நினைவுபடுத்தி கொண்டே இருங்கள். அவர்களின் பேச்சுக்கு நீங்கள் மயங்கி விடாதீர்கள். எப்பொழுதும் பாசிட்டிவ் எண்ணங்களுடன் இருங்கள்.

பிசியாக இருங்கள்

அவர்கள் நீங்கள் தனியாக இருக்கும் போதோ அல்லது பொது இடங்களிலோ உங்களிடம் பேச முயற்சி செய்யலாம் அதனால் நீங்கள் தனிமையில் இருக்கும் போது அவர்களை உங்களிடம் வராத படி பார்த்துக்கொள்ளுங்கள். பொது இடங்களில் நீங்கள் மற்ற நபர்களுடன் பிசியாக இருங்கள், குறைந்தது இருப்பதை போன்றாவது காட்டிக்கொள்ளுங்கள்

பேச்சில் கவனம்

என்னதான் செய்தாலும் அவர்கள் உங்களுடன் பேசுகிறார்கள் என்றால் உங்கள் பேச்சு எல்லையை மீறி அவர்களிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயத்திற்குள் சென்று விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

உதவியை கேளுங்கள்

நீங்கள் ஒருவரை வெறுக்கிறீர்கள் என்று அவர்களுக்கு சிலநேரம் புரியாமல் இருக்கலாம் அதனால் உங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பரை அழைத்து நீங்கள் வெறுக்கும் நபர் குறித்து அவரது செயல்பாடுகள் குறித்து அவரிடம் தெரிவித்து அவரின் உதவியை கேளுங்கள்.

உங்கள் நடவடிக்கைகள் 

நீங்கள் வெறுக்க விரும்பும் நபருக்கு உங்கள் நடவடிக்கைகளில் அல்லது பழக்க வழக்கங்களில் ஏதோ ஒன்று பிடித்திருக்கும் அதனால் நீங்கள் அவர்கள் முன் மட்டும் அதற்கு மாறான நடவடிக்கை அல்லது பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள்

How to avoid love