காதல் இந்த வார்த்தை பலருக்கு இனிமையாக இருந்தாலும் பலர் வெறுக்கும் வார்த்தையாக இருக்கும். ஒருவர் காதலில் வசப்படுவதற்கு விரும்பமாட்டார்கள். அதற்கு அவர்களுக்குள் இருக்கும் பயம், இதற்கு முன்னர் ஏற்பட்ட அனுபவம், அல்லது மற்றவருக்கு ஏற்பட்ட அனுபவம் என ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். இந்த பதிவில் நாம் ஒருவர் காதலில் விழாமல் கடைசி வரை முரட்டு சிங்கிள்களாவே வாழ்வது எப்படி என பார்க்கலாம். 

உங்கள் இலக்குகளில் கவனம்

உங்கள் சொந்த வாழ்வில் இலக்குகளை நீங்களே நிர்ணயித்து அந்த இலக்கை நோக்கி பயணப்படும் வேலையில் கவனம் செலுத்த துவங்குங்கள் இலக்கை அடையும் பட்சத்தில் அடுத்தாக ஒரு இலக்கை நிர்ணயித்து அதற்கான பயணம் என உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். 

நண்பர்கள்/ குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்

பொதுவாக உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் தனிமையாக உணரும் போது அதிகமாக வரும். அதனால் நீங்கள் அதிகமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரங்களை செலவிடுங்கள். 

இயற்கையுடன் பொழுதுதை கழியுங்கள்

உங்கள் பொழுதை கழிக்கும் நேரங்களில் நீங்கள் இயற்கையான சுவாசம், மரங்கள், பூக்கள், மலைகள், கடல்கள் என ஏதோ இயற்கையான இடங்களுக்கு சென்று அங்கு இயற்கை ரசிக்க பழங்குங்கள் உங்கள் காதலை இயற்கை மீது வெளிப்படுத்த துவங்குங்கள். 

கிரியேட்டிவிட்டி

நீங்கள் தனியாக இருக்கும்போது புதிய விதமான செயல்களுக்கு உங்கள் மூளை எப்பொழுதும் தயாராக இருக்கும். அதனால் நீங்கள் செய்ய நினைத்த காரியங்களை அந்த நேரங்களில் முயற்சி செய்யுங்கள். அல்லது நீங்கள் ரெகுலராக பார்க்கும் ஒரு வேலையை வித்தியாசமாக செய்துபாருங்கள். உங்கள் மனதில் கிரியேட்டிவிட்டிக்கு அதிக வாய்ப்பளியுங்கள். 

அற்பணிப்பு

நீங்கள் ஏதேனும் அமைப்புகளுடன் இணைந்து அந்த அமைப்பிற்கான பணிகளுக்காக உங்கள் நேரத்தை செலவிடுங்கள், இயற்கை, இலக்கியம், உடற்பயிற்சி இது போன்ற உங்கள் மனதிற்கு பிடித்த அமைப்புகளில் சேருங்கள் அல்லது நீங்களே ஒரு அமைப்பை உருவாக்கி நடத்த முடிந்தால் அதை முயற்சி செய்யுங்கள். 

காதலர்களை தவிர்க்கவும்

சமூகவலைதளங்களை தவிர்த்து விடுங்கள்

சமூகவலைதளங்களில் நீங்கள் பயன்படுத்தினால் அதில் உங்களுக்கு பிடித்த நபரின் பதிவுகள், புகைப்படங்கள், என ஏதோ ஒன்று வந்து கொண்டே இருக்கும் அது உங்களின் சிங்கிள் மனநிலையை மாற்றி கமிட் ஆகலாம் என்ற எண்ணத்தை உங்கள் மத்தியில் விதைக்கலாம். 

பிசியாக இருங்கள்

நீங்கள் உங்களுக்கான ஒய்வு நேரத்தை குறைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை இழுத்துப்போட்டு செய்ய பழகி கொள்ளுங்கள். நீங்கள் எப்பொழுதும் பிசியாக இருப்பது மூலம் உங்களுக்கு காதல் வாய்ப்புகள் குறையும்.

Murattu single