சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. 

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் என்ஜிகே. அரசியல் கதையை மையப்படுத்திய இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், இளவரசு, குரு சோமசுந்தரம், வேல ராமமூர்த்தி, பாலாசிங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

4வது இடம்:
இந்தாண்டு வெளியான படங்களில் வசூல் ரீதியில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது என்ஜிகே.

1. அஜித்தின் விஸ்வாசம் சென்னையில் 88 லட்சம் வசூல் செய்ததோடு தமிழ்நாட்டில் 1.21 கோடி ரூபாயை முதல் நாள் வசூல் செய்தது.
2. அவெஞ்சர்ஸ் ரூ. 1.17 கோடி வசூல் 
3. பேட்ட ரூ. 1.12 கோடி வசூல் செய்தது.
4. சூர்யாவின் என்ஜிகே ரூ. 1.03 கோடி வசூல் செய்துள்ளது.

10வது இடம்:
இதுவரை தமிழ் திரைப்படங்களில் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் சூர்யாவின் என்ஜிகே 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

டாப் 10 பட்டியல்:

NGK Collection

தரவரிசைபடம்வசூல்
12.Oரூ. 2.64 கோடி
2சர்கார்ரூ. 2.41 கோடி
3காலாரூ. 1.76 கோடி
4மெர்சல்ரூ. 1.52 கோடி
5விவேகம்ரூ. 1.21 கோடி
6எண்ட்கேம்ரூ. 1.17 கோடி
7கபாலிரூ. 1.12 கோடி
8பேட்டரூ. 1.12 கோடி
9தெறிரூ. 1.05 கோடி
10என்ஜிகேரூ. 1.03 கோடி