லண்டன்: இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே உள்ள மால் சாலையில் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான துவக்க விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் ஜாம்பவான்களான விவ் ரிச்சர்ட்ஸ், அனில் கும்ளே ஆகியோர் 60 வினாடி சேலஞ்சில் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூலை 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

அதிகரிக்கும் பரபரப்பு:
இன்று துவங்கும் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், இது வரை கோப்பை வெல்லாத இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழா பிரமாண்டமாக நடந்தது.

 

samayam tamil

Opening Ceremony

4000 பேர் பங்கேற்பு:
இந்நிலையில் பொதுமக்கள் 4000 கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்டிரு பிளிண்டாப், இந்தியாவின் சிவானி டாண்டேக்கர் ஆகியோர் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து இத்தொடரில் பங்கேற்கும் 10 அணி கேப்டன்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

60 வினாடி சேலஞ்ச்:

தொடர்ந்து டிரம் மற்றும் பேண்டு வாத்திய கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்தது. பின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்ச்சியாக 60 வினாடிகள் கிரிக்கெட் சேலஞ்சில் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் சுழற் ஜாம்பவான் அனில் கும்ளே பங்கேற்றார். தவிர பர்ஹான் அக்தர் ஆகியோர் 60 வினாடி சேலஞ்சில் கலந்து கொண்டனர்.

இந்தியா கடைசி:
இதில் வங்கதேச அணி 22 புள்ளிகள் எடுத்தது. பாகிஸ்தான் 38 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 69 புள்ளிகளும், தென் ஆப்ரிக்கா 48 புள்ளிகளும், நியூசிலாந்து 32 புள்ளிகளும் எடுத்தது. இங்கிலாந்து 74 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தது. இந்தியா வெறும் 19 புள்ளிகள் பெற்று கடைசி இடம் பிடித்தது.

கோப்பை அறிமுகம்:
தொடர்ந்து கடைசியாக நடந்த (2015) உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் சுவான் ஆகியோர் உலகக்கோப்பையை அறிமுகம் செய்தனர். தொடர்ந்து லாரின் மற்றும் ரூடிமெடல் ஆகியோ உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலான ‘ஸ்டாண்ட் பை’ பாடலுக்கு நடனமாட, ரசிகர்களும் உற்சாகமாக நடமான உலககோப்பை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

 

samayam tamil

Google

கூகுள் டூடுள்:
இந்நிலையில் உலகின் முக்கிய நிகழ்வுகளுக்கு டூடுள் மூலம் பெருமை சேர்க்கும் கூகுள் நிறுவனம், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கத்தை முன்னிட்டு, சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது