இந்திய கிரிக்கெட்கேப்டன் விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை ஒரு லிட்டர் ரூ. 600 ஆகும். 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் பிட்டாக இருக்க உடல்மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வார் என அனைவருக்கும் தெரியும். இவர் ஜிமில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். 
பிட்னஸ் ரகசியம்:
உலக கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடும் போது கோலி தான் மிகவும் பிட்டான வீரர் என நிபுணர்களும் தெரிவித்திக்கின்றனர். இந்நிலையில் தான் குடிக்கும் நீரில் கூட டயட்டை கோலி பின்பற்றி வருகிறார். 
இவருக்காகவே பிரான்ஸிலிருந்து தண்ணீர் வருகிறது. பிரான்ஸில் உள்ள எவியன் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்கள் கோலிக்காக வரவழைக்கப்படுகிறது. 

முழு சத்துக்கள்: 
இதன் விலை ஒரு லிட்டர் 600 ரூபாயாகும். விளையாடும்போது மட்டுமில்லாமல் எங்கு போனாலும் எவியன் தண்ணீர் பாட்டில் தான் கொண்டு செல்கிறாராம். தண்ணீரை பில்ட்டர் செய்யும்போது மினரல் சத்துகள் வடிகட்டப்படும். இதனால் முழு மினரல் சத்துகள் நமக்கு கிடைப்பதில்லை. எவியன் மினரல் வாட்டர் மிகுதியான மினரல் சத்துகள் கிடைக்கிறது. அதனால் தான் இதன் விலை கூடுதலாக இருக்கிறது. 

samayam tamil

Virat Kohliஇயற்கையாகவே:
பனி படர்ந்த மலைகளில் உற்பத்தியாகும் நீரை இயற்கையான முறையில் பில்ட்டர் செய்து எவியன் நிறுவனம் குடிநீராக வர்த்தகப்படுத்துகிறது. இந்த நீரை பிரான்ஸ் மெடிக்கல் அகாடமி பரிசோதித்துத் தரச்சான்றிதழை வழங்கியிருக்கிறது.