தெறி’, ’மெர்சல்’ படங்களை தொடர்ந்து ஹிட் கூட்டணியான விஜய் மற்றும் அட்லி இணை மூன்றாவது முறையாக கைக்கோர்த்துள்ள படம் ‘தளபதி 63’. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதனால் இதை ‘தளபதி 63’ என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். பெண்கள் கால்பந்து அணியை வழிநடத்திச் செல்லும் பயிற்றுவிப்பாளராக விஜய் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை.

முன்னதாக, ‘தளபதி 63’ படத்தில் ஷாருக்கான் விஜய்யிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஐபிஎல் போட்டி நடக்கும் போது ஷாருக்கான், இயக்குநர் அட்லி சந்தித்துப் பேசினார்கள்.

ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என்றும், ‘தளபதி 63’ படத்தின் விளம்பர யுக்திக்காக அட்லி தரப்பினர் அதுபோன்ற செய்தியை கசிய விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை அதிலும் தெளிவில்லை.

விஜய் ஏற்கனவே ’அழகிய தமிழ் மகன்’, ’கத்தி’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களிலும், ‘மெர்சல்’ படத்தின் மூன்று வேடங்களிலும் நடித்துள்ளார். இதில் ‘கத்தி’ ‘மெர்சல்’ நல்ல வரவேற்பை பதிவு செய்தது.

தனியாக நடிப்பதை விட, இரட்டை வேடங்கள் தனக்கும் தன்னுடைய படத்திற்கும் நன்றாக கைக்கொடுப்பதாக விஜய் நம்புகிறாராம். அதனாலேயே ‘தளபதி 63’ படத்தில் விஜய் கதாபாத்திரம் இரட்டை வேடங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன நம்பத் தகுந்த வட்டாரங்கள்.